Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இதிலேயே கை வச்சிட்டீங்களே… அவங்களுக்கு கண்டிப்பா சிறை வாசல்… காவல்துறையினரின் செயல்…!!

ஏ.டி.எம் களிலிருந்து 45, 00, 000 ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற 3 வெளிமாநில நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னையில் உள்ள வேளச்சேரி மற்றும் தரமணி ஆகிய பல பகுதிகளில் அமைந்திருக்கும் எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.டி.எம்-ங்களை குறிவைத்து சென்ற 15-ஆம் தேதியிலிருந்து 18-ஆம் தேதி வரை அடுத்தடுத்த நூதனமான முறையில் 45, 00, 000 வரை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுபற்றி சென்னை மாநகர காவல்துறை கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக விசாரணை செய்ததில் வடமாநில கொள்ளையர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து கீழ்ப்பாக்கம் மற்றும் டி.நகர் காவல்துறை துணை கமிஷனர் தலைமையில் தனிப்படை அரியானா பகுதிக்கு விரைந்து சென்றுள்ளது.

அதில் அங்கு அரியானா காவல்துறையினருடன் சேர்ந்து நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வீரேந்தர் ராவத் மற்றும் அமீர் அர்ஷ் ஆகிய 2 கொள்ளையர்களையும் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர். தற்போது அவர்கள் இருவரும் காவல்துறையினரின் விசாரணையில் இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து அரியானாவில் பதுங்கியிருந்த மூன்றாவது முக்கிய குற்றவாளியான நஜீம்‌ உசேன் என்பவரையும் காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விமானத்தின் மூலமாக சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்.

பின்னர் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அழைத்து வந்த கொள்ளையர்களின் ஒருவனான நஜீம் உசேனை வாகனத்தில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதில் அங்கு வைத்து அவரிடம் கொலை சம்பவம் நடந்தது எப்படி என நடித்துக் காட்ட செய்துள்ளனர். இதில் அவர்களுடன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கூட்டாளிகள் யார் என விரிவாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைச்சாலையில் அடைக்க இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |