சத்திரம்பட்டி அருகே சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சத்திரம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக கேரள மாநிலத்தின் லாட்டரி சீட்டை சிலர் விற்பனை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து கீழ ராஜகுலராமன் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த ரகசிய தகவலையடுத்து சத்திரம்பட்டி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டடனர். அப்போது அங்கு சட்டத்திற்கு புறம்பாக லாட்டரி சீட்டை ஒருவர் விற்றுக்கொண்டிருந்தார்.
அவரை போலீசார் மடக்கி பிடித்த ராஜகுலராமன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் சங்கரபாண்டியபுரம் பகுதியில் வசித்து வருபவர் என்றும் அவர் பெயர் மருத்துவாமலை என்பதும் தெரியவந்தது.இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குபதிவு செய்து பின் கைது செய்தனர்.