சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலிதொழிலாளிக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காந்தி நகரில் கூலி தொழிலாளியான பால் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 28/11/2014 தேதியன்று பால்ராஜ் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பால் ராஜை கைது செய்துள்ளனர்.
மேலும் இது குறித்து வழக்கானது போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. அதன் பிறகு இந்த வழக்கை விசாரித்த நீதிபதியான தனசேகரன் என்பவர் பால்ராஜூவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 6 ஆயிரம் ரூபாய் பணமும் அபராதமாக விதித்து தீர்ப்பளித்தார்.