சேலத்தில் வாடகை வீட்டை அபகரிக்க முயற்சி செய்ததாக சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மானுஷ் கைது செய்யப்பட்டுள்ளார்
ஏற்காடு அடிவாரம் கொண்டநாயக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆயிஷா குமாரி என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனக்கு சொந்தமான வீட்டில் தங்கியிருக்கும் பியூஸ் மானுஷ் வீட்டை அபகரிக்கும் நோக்கத்தில் வெளியேற மறுப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இதுதொடர்பாக பியூஸ் மானுஷிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் பின்னர் அவரை கைது செய்தனர். மத்திய-மாநில அரசுக்கு எதிராக கருத்துக்கள் தெரிவிப்பதால் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பியூஸ் மானுஷ் தரப்பில் கூறப்படும் நிலையில் ஆதாரங்களின் அடிப்படையிலேயே கைது செய்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.