இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மாணவியின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட, உடனே பெற்றோர் மாணவியை கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது தான் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. மாணவி 2 மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் என்ன நடந்தது, இதற்கு காரணம் யார் என்று மாணவியிடம் விசாரித்தனர்.
அப்போது மாணவி சற்றும் யோசிக்காமல் தனக்கு நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெளிவாக கூறினார். இதையடுத்து சற்றும் தாமதிக்காமல் மாணவியின் பெற்றோர் சம்பவம் குறித்து தேவாலா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் போலீசார் முர்ஷிது மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தங்கையை அண்ணன் சீரழித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.