பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள நாகமரையை சார்ந்தவர் சின்னமுத்து. இவருடைய மகன் விஜய் என்பவர் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் ஒரு மாணவியை விஜய் கடத்தியதாக கூறப்படுகிறது. இந்த கடத்தல் குறித்து மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் லதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த விஜயை தேடி வந்துள்ளனர். பின்னர் நேற்று முன்தினம் விஜய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்