தவறுகளை சுட்டிக்காட்டினாலே கைது செய்வது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என கோவை பத்திரிகையார்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி ஊழியர்களுக்கும், கோவையில் பயிற்சி மருத்துவர்கள் உணவிற்கு சிரமம் அடைந்துள்ள செய்தியையும், கோவையில் உள்ள ரேஷன் கடையில் நிவாரணப் பொருட்களை கொள்ளையடிப்பதாக வந்த குற்றச்சாட்டை செய்தியாக வெளியிட்டதற்காக ஆன்லைன் மீடியா இருவரை கோவையில் போலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததோடு, அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள டிடிவி தினகரன்,
https://twitter.com/TTVDhinakaran/status/1253584669825622017
https://twitter.com/TTVDhinakaran/status/1253584669825622017
கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கு உள்ள குறைகளைப் பற்றி செய்திகளை வெளியிட்டதற்காக கோயம்புத்தூரில் இணையதள பத்திரிகையாளர் ஆண்ட்ரூ சாம் ராஜபாண்டியன் கைது செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் மீதான நடவடிக்கையைக் காவல்துறையினர் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். அரசு நிர்வாகத்தில் ஏற்படும் தவறுகளைச் சுட்டிக்காட்டினாலே கைது செய்வது என்பது ஜனநாயக நாட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.