Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கடைக்கு போன நேரம்…. மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீசின் அதிரடி நடவடிக்கை…. சிக்கிய 3 பேர்….!!

மருத்துவரின் காரில் இருந்த பொருட்களை திருடிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி பகுதியில் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக வெங்கடேஷ் என்பவர் வேலை பார்த்து வருகின்றார். இவர் கடந்த ஜுலை 8 – ஆம் தேதியன்று தனது காரில் ராமகிருஷ்ணா ரோடு பகுதியில்  சாலையோரம் காரை நிறுத்திவிட்டு  கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக காரின் கதவு திறக்கப்பட்டு அதில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணம், ஏடிஎம் கார்டு மற்றும் செல்போனை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வெங்கடேஷ் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் அமைந்துள்ள சி.சி.டிவி கேமராவை ஆய்வு செய்த போது 3 பேர் கொண்ட மர்ம கும்பல் காரில் இருந்த பொருட்களை திருடியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சி.சி.டிவி காட்சிகளில்  பதிவாகி இருந்த விஜயகுமார், அம்பேத்கர் மற்றும் பிரபாகரன் ஆகிய மூவரையும் காவல்துறையினர் மடக்கிப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன்பிறகு மூவரும் மருத்துவரின் காரில் இருந்த பொருட்களை திருடியதை ஒப்புக் கொண்டதை அடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மூவரையும் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |