14 ரவுடிகளை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாரனேரி, சிவகாசி கிழக்கு, திருத்தங்கல் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் வசிக்கும் 165 ரவுடிகளை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர்.
இதில் 14 ரவுடிகள் தொடர்ந்து குற்ற செயல் செய்து வந்துள்ளனர். இதனை கண்காணித்த காவல்துறையினர் 14 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்த 1 வாள் மற்றும் 8 கத்திகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.