கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பாளையங்கோட்டை பகுதியில் வட பேச்சு என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் மீது தென்காசியில் நடைபெற்ற இரண்டு கொலை சம்பவங்களில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருகின்றனர். இந்நிலையில் 2019-ஆம் வருடம் முதல் கோர்ட்டில் ஆஜராகாமல் தற்போது தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
இதனையடுத்து அவருக்கு கோர்ட்டில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வட பேச்சியை கைது செய்துள்ளனர். மேலும் சிறப்பான முறையில் செயல்பட்ட தனிப்படை காவல் துறையினரை மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் பாராட்டியுள்ளார்.