Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க” குற்றங்களை தடுக்க நடவடிக்கை…. போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை….!!

மணல் கடத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தில் கைது என காவல்துறை சூப்பிரண்டு எச்சரிக்கை செய்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தின் காவல்துறை சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி மணல் கடத்தல் அல்லது செயற்கை மணல் தயாரித்தாலோ அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என அவர் எச்சரிக்கை செய்துள்ளார். இந்நிலையில் இம்மாவட்டத்தில் பாலாறு உள்ளிட்ட பல பகுதிகளில் அதிக அளவில் மணல் கடத்தல் நடைபெற்று வருவதாக காவல்துறை சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவல் பேரில்  தனிப்படைகள் அமைத்து அனைத்து பகுதிகளிலும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் பல இடங்களில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தலிலும் மற்றும் விவசாய நிலங்களில் இருக்கும் வண்டல் மண்ணை வெட்டி எடுத்து மறைவான பகுதிகளில் செயற்கை மணல் தயாரித்தும் வருகின்றனர்.

பின்னர் இது பற்றி புகார் வந்ததால் காவல்துறையினர் திடீரென அப்பகுதியில் ஆய்வு செய்துள்ளனர். அப்போது அங்கு செயற்கை மணல் தயாரிப்பதற்காக கட்டப்பட்டு வைத்திருந்த மணல் தொட்டியை பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக உடைத்து எடுக்க காவல்துறை சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். அதன்பின் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து மாட்டு வண்டி மூலமாக மணல்களை கடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

அதற்கு பிறகு சமூகத்திற்கு விரோதமாக இருக்கின்ற கும்பல் செயற்கை மணல் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். பின்னர் செயற்கை மணல் தயாரிப்பவர்கள் மற்றும் மணல் கடத்தலில் ஈடுபடுவர்கள் எவராக இருப்பினும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் செயற்கை மணல் தயாரித்தல் அல்லது மணல் கடத்தல் போன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவோர் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |