அனுமதியின்றி கருந்திரி பதுக்கி வைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கே.கே.நகர் பகுதியில் அனுமதியின்றி கருந்திரி பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் அமைந்துள்ள வீடுகளின் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ராஜ் என்பவரின் வீட்டில் அனுமதியின்றி பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிகள் இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜிடமிருந்த கருத்திரியை பறிமுதல் செய்ததோடு, அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.