Categories
உலக செய்திகள்

15 நாளா எங்களுக்கு ஒன்னுமே தரல…. தமிழர்களை கைது செய்த இந்தோனேஷியா…. வைரலாகி வரும் ஆடியோ….!!

தேவையான ஆவணங்கள் இல்லை என்று கூறி தமிழகம் திரும்பிய 6 பேரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.

தமிழ்நாட்டிலுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் கவின் என்பவர் வசித்துவருகிறார். இவர் இந்தோனேசியாவில் கப்பல் டீசல் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இந்தோனேஷியாவில் பணிபுரிந்து வரும் கவின் உட்பட 6 பேர் கடந்த 8ஆம் தேதி தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்புவதற்காக அந்நாட்டில் இருக்கும் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்கள்.

அதன்பின் விமான நிலையத்திலிருக்கும் காவல் துறை அதிகாரிகள் இவர்களிடம் போதிய ஆவணங்கள் இல்லை என்று கூறி சொந்த ஊருக்கு திரும்பிய 6 பேரையும் கைது செய்துள்ளார்கள். இதனையடுத்து கைது செய்த அந்த 6 பேரையும் பாட்டம் என்ற இடத்திலிருக்கும் சிறையில் அடைத்துள்ளார்கள். இதுகுறித்து கவின் தன்னுடைய குடும்பத்திற்கு ஆடியோ மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, சொந்த ஊருக்கு திரும்பிய தங்களை இந்தோனேஷிய விமான நிலைய காவல் துறை அதிகாரிகள் போதிய ஆவணங்கள் இல்லை என்று கூறி கைது செய்ததோடு மட்டுமின்றி 15 நாட்களாக தனக்கும் தன்னுடன் இருப்பவர்களுக்கும் உணவும் தண்ணீரும் தராமல் இருட்டு அறையில் வைத்து தங்களை கொடுமை செய்வதாக கதறி அழுதுள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவருடைய குடும்பத்தினர்கள் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் இதுகுறித்து மனு ஒன்றை கொடுத்துள்ளார்கள். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட கலெக்டர் இந்தோனேஷிய காவல்துறை அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்டிருக்கும் தமிழர்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக கூறியுள்ளார்.

Categories

Tech |