கோவை கருப்பு கடை பகுதியில் பி.எஃப்.ஐ தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் என்பவர் வீட்டில் தேசிய புலமை முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இஸ்மாயில் வீட்டில் முன்பாக துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனை கண்டித்து போராட்டம் நடத்திய PFI அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். இஸ்மாயில் என்பவரை அழைத்துச் சென்றது தேசிய புலனாய்வு முகமை.
அதே போல தேனி வடகிழக்கு காவல் நிலையம் முன்பு பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் பிரமுகர்கள், அவர்கள் குடும்பத்தினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடைபெறுகின்றது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மதுரை மாவட்ட நிர்வாகிகள் வீடுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதிகாலை நாலு மணி முதல் கோரிப்பாளையம், நெல்பேட்டை, ,ஆகிய இடங்களில் NIA அதிகாரி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வில்லாபுரத்திலும் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.