Categories
மாநில செய்திகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்சனிக் ஆல்பம் 30 சி மாத்திரை பரிந்துரை – அமைச்சர் ஜெயக்குமார் தகவல்!

ஆர்சனிக் ஆல்பம் 30சி என்ற ஓமியோபதி மாத்திரை உயிரைக் காக்கும் கேடயம் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மனித குலத்திற்கே சவாலான ஒரு விசயமாக உள்ளது என தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்சனிக் ஆல்பம் 30சி என்ற ஓமியோபதி மாத்திரைகளை சாப்பிடலாம் என கூறியுள்ளார். ஆர்சனிக் ஆல்பம் 30சி நோய் எதிர்ப்பு சக்தியை உடம்பில் உருவாக்கும் வல்லமை பெற்றுள்ளது. ஒரு நாளைக்கு நான்கு மாத்திரைகள் வீதம் மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும்.

மூன்று நாட்களுக்கு தொடர்ந்து 12 மாத்திரைகள் சாப்பிட்டால் கொரோனா வைரஸிற்கு எதிராக போராடும் தன்மை பெற்றுள்ளது என கூறியுள்ளார். தமிழக அரசால் ஆர்சனிக் ஆல்பம் 30சி என்ற ஓமியோபதி மாத்திரை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் 20 லட்சம் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக சென்னையில் உள்ள ராயபுரத்தில் ஆர்சனிக் ஆல்பம் 30சி மாத்திரைகளை ஓமியோபதி மருத்துவர்கள் வழங்கி வருகின்றனர் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இதனிடையே வி.பி.துரைசாமியிடம் இருந்து தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டதை அடுத்து இன்று காலை அவர் பாஜகவில் இணைந்தார். இதுகுறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இனி வரும் காலங்களில் திமுகவில் இருந்து பலர் வெளியேறுவார்கள். பட்டியலின மக்களுக்கு திமுகவினர் உரிய மரியாதை வழங்குவதில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |