இந்திய அரசியல் பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை அரசியல் பிரமுகரான Gurlal Singh என்பவர் தனது வீட்டருகே சில மர்ம நபர்களால் சுடப்பட்டார். பின்னர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி Gurlal Singh பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக Gurvindhar Pal, Sukhwindher Singh, Saurabh Verma என்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில் காவல்துறையினர் கூறியதாவது,” Gurlal Singh-ஐ கொலை செய்வதற்கான திட்டம் கனடாவில் தீட்டப்பட்டுள்ளது. அவர் கொல்லப்பட்டதற்கு காரணம் என்னவென்றால், இரண்டு தரப்பினருக்கு இடையேயான விவகாரத்தில் Gurlal Brar என்ற நபர் கொல்லப்பட்டுள்ளார். அவர் கொலைக்கான பின்னணியில் Gurlal Singh இருந்துள்ளர்.
இதனை அறிந்த Gurlal Brar-ன் சகோதரர் Goldie Brar கனடாவில் உள்ள தனது கூட்டாளிகளுடன் இணைந்து Gurlal Singh-ஐ கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே கட்சி ஒன்றில் இளைஞரணி தலைவராக இருக்கும் Gurlal Singh டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் பேரணியில் நான் கலந்து கொள்ள போகிறேன் என்று பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதனை பார்த்த மூவரும் அவரை கொலை செய்து விடலாம் என்று எண்ணி அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். ஆனால் விவசாயிகளின் பேரணியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் Gurlal Singh-ஐ அவர்களால் கொலை செய்ய முடியவில்லை. இதனால் அவர்கள் கடந்த வியாழக்கிழமை அன்று வீட்டிற்கு அருகில் வைத்து Gurlal Singh-ஐ சுட்டுள்ளனர் ” என்று கூறியுள்ளனர். இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மீதமுள்ள குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.