மராட்டிய மாநிலத்தில் அகமது நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் 20 பேர் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென அவசர சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து 4 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ அருகில் உள்ள மற்ற வார்டுகளுக்கும் பரவியது. இந்த தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
மேலும் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து நோயாளிகள் வெளியேற்ற முயற்சி செய்தனர். இதில் நோயாளிகள் உள்பட 12 பேர் காயமடைந்த நிலையில் 11 பேர் உயிரிழந்தனர். இவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை பார்வையிட்டனர். ஆனால் தீ விபத்துக்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை.