Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செம ஹாப்பி நியூஸ்…. தீபாவளி போனஸ் எவ்வளவு தெரியுமா ?….. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு தீபாவளி பண்டிகை உள்ளிட்ட பண்டிகை நாட்களில் போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி தற்போது தீபாவளி பண்டிகை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கான போனஸ் குறித்து மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை ஒரு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அரசாணையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த நிதி ஆண்டுக்கான இடைக்கால போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாசம் 31 ஆம் தேதி பணியில் இருந்தவர்கள், கடந்த நிதி ஆண்டில் குறைந்த பட்சம் 6 மாதங்கள் தொடர்ந்து பணியில் இருந்தவர்கள் ஆகியோருக்கு இடைக்காலப் போனஸ் வழங்கப்படும். மேலும் போனஸ் கணக்கிடுவதற்கான உச்சவரம்பு ரூ.7000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுவை மாநில அரசில் பணிபுரியும் பிரிவு பி மற்றும் சி ஊழியர்களுக்கு போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க நிதித்துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி மாநில அரசில் பணிபுரியும் உற்பத்தி சம்பந்தப்பட்ட போனஸ் பெறாத பிரிவு பி மற்றும் சி ஊழியர்கள், முழு நேர தற்காலிக ஊழியர்கள் போனஸ் வழங்குவதற்கான கோப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரிவு பி மற்றும் பிரிவு சி ஊழியர்களுக்கு போனஸ் ரூ.6908 மற்றும் முழு நேர தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.1184 வழங்கப்படும் என்று நிதி துறை சார்பு செயலர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார.

Categories

Tech |