சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வண்ணம் கல்லாறு பழப்பண்ணையில் வனவிலங்குகளின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் அருகில் இருக்கும் வனப்பகுதியை ஒட்டி 8.92 ஹெக்டேர் பரப்பளவில் கல்லாறு அரசு தோட்டக்கலைப் பண்ணை அமைந்துள்ளது. இந்தப் பண்ணையில் பல வகையான அலங்கார செடி வகைகள், வாசனை திரவியப் பயிர்கள், பழமரங்கள் போன்றவை பராமரிக்கப்பட்டு வருகின்றது. தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த பண்ணைக்குள் செல்ல அனுமதி கிடையாது. ஆனால் பொதுமக்கள் பழங்களை வாங்குவதற்கு மட்டும் அங்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பூங்காவில் ஏராளமான பாறைகள் ஆங்காங்கே அமைந்துள்ளது. இந்நிலையில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு வகையான விலங்குகளின் ஓவியங்கள் அங்குள்ள பாறைகளில் தத்ரூபமாக வரையப்பட்டிருக்கின்றன. இதனை அடுத்து அதில் துள்ளி ஓடும் மானை முதலை பிடித்து விழுங்குவது, வேட்டைக்கு தயாராகும் சிறுத்தை, ஓய்வு எடுக்கும் புலி போன்ற வரைபடங்கள் மிகவும் அழகாக வரையப்பட்டுள்ளது. அதன் பின் சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் இன்னும் ஏராளமான வேலைப்பாடுகள் அங்கு நடைபெற உள்ளதாக அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.