Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் இறுதிச்சடங்கில் பேசிய பெண்…. செயற்கை நுண்ணறிவு மூலம் சாத்தியமான நிகழ்வு…!!!

பிரிட்டனில் இறந்த பெண் இறுதி சடங்கின் போது ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்னும் செயற்கை நுண்ணறிவு மூலமாக பேசிய சம்பவம் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்க செய்துள்ளது.

பிரிட்டனை சேர்ந்த 87 வயதுடைய மரினா ஸ்மித் என்ற மூதாட்டி கடந்த ஜூன் மாதத்தில் வயது முதிர்வால் காலமானார். நிலையில் அவரின் மகன் ஸ்டீபன் ஸ்மித் தொழில்நுட்பத்தின் மூலமாக தன் தாயின் இறுதிச்சடங்கில் அவரின் வாழ்க்கை குறித்த கேள்விக்கு அவரே பதிலளித்ததை காண்பித்துள்ளார்.

அதாவது ஒரு நபர் இறந்த பிறகும் அவருடன் பேசுவது சாத்தியம் என்றும் உயிரோடு இருந்த போது நாம் கேட்பதற்கு அவர்கள் விடை தருவது போன்று இறந்த பின்பும் பேசலாம் என்று கூறி இருக்கிறார் ஸ்டீபன் ஸ்மித். அதாவது ஒரு நபர் உயிரோடு இருக்கும் போது அவரிடம் சில கேள்விகளைக் கேட்டு, அதற்கு அவர் கூறும் பதிலை பதிவிட்டு கொள்ள வேண்டும்.

அதற்கு பிறகு, அவர் இறந்த சமயத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பமானது, நினைவூட்டல் வீடியோவை கண்டு அது பிறரின் கேள்விகளுக்கு விடை தரும் விதத்தில் பொருத்தமான பதில்களை தேர்ந்தெடுத்து காண்பிக்கப்படும். அப்போது, உயிரிழந்த நபர் நம்மோடு பேசுவது போன்ற உணர்வை தரும்.

Categories

Tech |