மெக்ஸிகோவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று காற்றினை சுத்தப்படுத்தும் செயற்கை மரங்களை உருவாக்கியுள்ளது.
இயற்கை மரங்களை வளர்க்க அதிக நேரமும், இடங்களும் தேவைப்படுகின்ற நிலையில் மெக்ஸிகோவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று காற்றை சுத்தப்படுத்தக் கூடிய 368 இயற்கை மரங்களுக்கு இணையாக செயற்கை மரங்களை உருவாக்கியுள்ளனர். இந்த செயற்கை மரங்கள் கரியமில வாயு போன்ற மாசுக்களை நீக்கி சுத்தமான காற்றினை வெளியிடுகின்றது.
மேலும் செயற்கையான வேதிவினைகள் மூலம் இயற்கை தாவரங்கள் மேற்கொள்ளும் ஒளிச்சேர்க்கை கொண்டுள்ள இந்த செயற்கை மரத்திற்கு “பயோஅர்பன்” என்று பெயர் வைத்துள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில் மெக்ஸிகோ சிட்டி உள்ளிட்ட நகரங்களில் காற்று மாசுபாடு அளவுக்கு அதிகமாக இருப்பதால் இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் பயன்படக் கூடிய ஒன்றாக எதிர்பார்க்கப்படுகிறது.