Categories
உலக செய்திகள்

ஆர்டிகல் ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள்… வெற்றிகரமாக விண்ணில் ஏவிய சீனா…!!!

சீனா தனது புதிய ஆர்டிகல் ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

சீன வடமேற்கு பகுதியில் இருக்கின்ற ஜியுவான் செயற்கைக் கோள் ஏவுதளத்திலிருந்து சீனாவின் புதிய ஆப்டிக்கல் ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. இந்த செயற்கைக்கோள் ‘காபென்9 05’ என்று அழைக்கப்படுகிறது. இதனை ‘ மார்ச்2 டி கேரியர்’ என்ற ராக்கெட்டின் மூலமாக சீனா விண்ணில் செலுத்தியது.

மேலும் இந்த செயற்கைக்கோள் புவி வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட சீன அதிகாரிகள் கூறியுள்ளனர். அதுமட்டுமன்றி இந்த செயற்கைக்கோள், நில அளவீடுகள், நகரத் திட்டமிடல், சாலைகள் வடிவமைப்பு, பயிர் விளைச்சல் மதிப்பீடு, பேரழிவு தடுப்பு மற்றும் தணிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கு இது பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |