முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்தான புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக என்றாலே கலைஞர் தான் என்கின்ற அர்த்தத்தோடு அதை வடிவமைத்து இருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆனால் அது தான் உண்மை என்று நான் நினைக்கிறேன். திமுக இல்லாமல் கலைஞர் கிடையாது, கலைஞர் இல்லாமல் திமுக கிடையாது. இதை கலைஞரிடம் கேட்டீர்கள் என்றால் அவர் இதை கண்டிப்பாக ஒத்துக் கொள்ள மாட்டார்.
கலைஞர் எப்பவுமே என்ன சொல்வார் என்றால் ? அவருக்கு தலைவர் அண்ணா தான், அண்ணா தான் அவருக்கு எப்பவுமே தலைவராக இருந்திருக்கிறார்.எதிர்க்கட்சிக்காரர்களே… பாஜகவை சேர்ந்தவர்களே அதற்கு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டார்கள். ஒரே வார்த்தை தான் ஸ்டாலின் கலைஞரை விட மிகவும் பயங்கரமானவர் என்று பாஜகவினர் சொன்னதை நான் பல இடங்களில் சொல்லி இருக்கிறேன்.இது தான் நம்முடைய தலைவர் அவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு. என்னென்னமோ சொன்னார்கள்….
ஜாதகம் சரியில்லை, கட்டம் சரியில்லை என்று சொன்னார்கள்… எல்லாரையும் ஓரமாக உட்கார வைத்துவிட்டு, எப்படி ஒரு நல்லாட்சி நடத்த வேண்டும் என நிரூபித்துக் கொண்டு இருக்கின்றார். கண்டிப்பாக அடுத்த முறையும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தான், அதை யாராலும் தடுக்க முடியாது. திமுகவினுடைய போர்குணம், ஒன்றிய பாஜக அரசினுடைய பழிவாங்குதலோ, தமிழகத்தினுடைய நம்முடைய மாநிலத்தினுடைய நிதியோ, நமக்கு கிடைக்க வேண்டிய உரிமையோ, பறிக்கப்பட்டால்… கிடைக்காவிட்டால் கண்டிப்பாக நம்முடைய தலைவருடைய தலைமையில் திமுக உடைய போர்குணம் கண்டிப்பாக வெளிப்படும் என தெரிவித்தார்.