Categories
மாநில செய்திகள்

“ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடையில்லை” சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு…!!

 ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தை தடை விதிக்கமுடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம்  தீர்ப்பளித்திருக்கின்றது.

ஜெயலலிதா‌ மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு எதிரா‌க சென்னை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வழக்கு ஒன்றை தொடர்ந்தது. அதில், தங்கள் மருத்துவர்களை விசாரிக்க, 21 பேர் கொண்ட மருத்துவர்கள் குழுவை அமைக்க உத்தரவிடவும், அதுவரை ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க தடை விதிக்க வேண்டு_ மென்றும் கோரியிருந்தது.கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவின்  எதிர்மனுதாரர்களாக தமிழக பொதுத்துறை, ஆறுமுகசாமி ஆணையம் மற்றும் சசிகலா தரப்பினர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.‌

ஆறுமுகசாமி ஆணையம் க்கான பட முடிவு

இந்த வழக்கின் மனு விசாரணை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் அனைத்து தரப்பு வாதங்கள் மற்றும் பிரதிவாதங்கள் நிறைவடைந்து கடந்த மார்ச் 12 ஆம் தேதி தீர்ப்புக்கான தேதி குறிப்பிடப்படாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று வழங்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடையில்லை என்று கூறி அப்போலோ மருத்துவமனை கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

Categories

Tech |