ஆறுமுகநேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆறுமுகநேரியில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதை அடுத்து மருத்துவமனையில் இருக்கும் அனைத்து பதிவேடுகளையும் ஆய்விட்டார். மேலும் நோயாளிகள் தேடி இல்லம் தேடி மருந்து கொடுக்கும் திட்டம் செயல்படுத்துவதை பற்றி கேட்டறிந்தார்.
பின் மருத்துவமனையில் இருக்கும் பிரசவ வார்டு, ஸ்கேன் செய்யும் இடம், ரத்த பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் சுகாதார வளாகங்களையும் பார்வையிட்டார். பின் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இதன்பின் ஆறுமுகநேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற வருடத்திற்கான தேசிய தர உத்தரவாத சான்றிதழை மருத்துவமனை டாக்டர் சீனிவாசனிடம் ஆட்சியர் வழங்கி பாராட்டினார்.