Categories
தேசிய செய்திகள்

அருண் ஜெட்லி இறுதி சடங்கு… பா.ஜ.க எம்.பி உட்பட 11 பேர் செல்போன் திருட்டு..!!

அருண் ஜெட்லி இறுதி சடங்கு நிகழ்ச்சியில்  பா.ஜ.க எம்.பி பாபுல் சுப்ரியோ மற்றும் திஜாரவாலா உட்பட 11 பேரின் செல்போன்கள் திருடப்பட்டுள்ளது. 

பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி கடந்த 9-ம்  தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். பின்னர் அவரது உடல் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து இறுதி ஊர்வலமாக டெல்லியில் உள்ள நிகாம் போத்  மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு  முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் பாஜக மத்திய அமைச்சர்கள், மூத்த  தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் நிர்வாகிகள் உட்பட பலரும் பங்கேற்றனர்.

Image result for supriyo Arun Jaitley Funeral Home

இந்நிகழ்வில் பங்கேற்ற பா.ஜ.க எம்.பி பாபுல் சுப்ரியோ உட்பட 11 பேரின் செல்போன்கள் திருடப்பட்டுள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. செல்போன்களை யாரோ ஒரு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளதாகவும்,  இதுதொடர்பாக காஷ்மியர் கேட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த புகாரும் எங்களுக்கு வரவில்லை என்று காஷ்மியர்  கேட் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Image result for Arun Jaitley Funeral Home

இது குறித்து ட்விட் செய்துள்ள செல்போன் திருட்டு போனவர்களுள் ஒருவரான பதஞ்சலி செய்தி தொடர்பாளர் திஜாரவாலா, செல்போன் திருட்டு போனது குறித்தும் செல்போனின் தற்போது லொகேஷன் குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |