அருண் ஜெட்லியின் இதயம் மற்றும் நுரையீரல் சரிவர இயங்கவில்லை என்று தகவல் வெளியாகியதை அடுத்து டெல்லி எய்ம்ஸ் வளாகம் பரபரப்பாக காணப்படுகின்றது.
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு அவர் அரசிலிருந்து விலகி இருந்தார். மேலும் அவரின் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்ததையடுத்து கடந்த 9ம் தேதி அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரின் உடல் நிலையானது மிகுந்த கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
அருண் ஜெட்லிக்கு தீவிரமாக உயிர் காக்கும் கருவி மூலம் பல்வேறு சிகிச்சைகளை மருத்துவ குழுவினர் அளித்து வருகின்றனர்.அருண் ஜெட்லி உடல்நிலை எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் , எக்மோ கருவி பொருத்தப்பட்டு டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் தற்போது அருண் ஜெட்லியின் இதயம் மற்றும் நுரையீரல் சரிவர இயங்கவில்லை.பாஜகவினர் மருத்துவமனையில் குவிந்த வண்ணம் இருப்பதால் மருத்துவமனை வளாகம் பரபரப்பாக இருந்து வருகின்றது.