இந்த தகவல் தந்தைக்கு தெரியவர ஹெலனிடம் கோபப்பட்டு அவரோடு பேசுவதை முற்றிலுமாக நிறுத்துகிறார். இதனால் மன வேதனையில் ஹெலன் வீட்டை விட்டு வெளியேறி மாயமாகிறாள். அவரை தந்தை அங்கும் இங்கும் தேடி அலைகிறார். ஆனாலும் மகளை கண்டுபிடிக்க முடியவில்லை. ஹெலன் எங்கே போனாள் என்ன ஆனாள் என்பது கதை. கதை விறுவிறுப்பாக செல்லும்.
இந்த படத்தினை தமிழ் ரீமேக் உரிமைக்கு பெரும் போட்டி நிலவியது. இந்த போட்டிக்கு நடுவில் நடிகர் அருண் பாண்டியன் இதனை வாங்கி இருக்கிறார். தமிழ் மொழியில் வெளியாகும் படத்தில் அருண் பாண்டியனும், அவரது மகள் கீர்த்தி பாண்டியனும் நடிக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு அருண் பாண்டியன் மீண்டும் நடிக்க வருகிறார். இதனால் இவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
அதேபோல கீர்த்தி பாண்டியன் ‘தும்பா’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தை ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கி மிகவும் பிரபலமான கோகுல் டைரக்டு செய்கிறார். மேலும் படத்தின் நடிகர் மற்றும் நடிகைகள் தேர்வு நடக்க இருக்கிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.