முன்னணி நடிகர் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து தனது முழு திறமையை வெளிப்படுத்தி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அருண் விஜய். சமீபகாலமாக இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஆகையால் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள சினம் மற்றும் பார்டர் ஆகிய படங்கள் கூடிய விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் அருண் விஜய் அடுத்ததாக பாக்ஸர் எனும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடிக்கிறார்.
இந்த பட வேலைகள் இன்னும் தொடங்கப்படாத நிலையில் நடிகர் அருண் விஜய் அடுத்ததாக பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார். கிராமத்து கதையாக உருவாக்கிவரும் இப்படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் அவ்வபோது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
மேலும் இப்படத்தில் பிரகாஷ்ராஜ், இமான் அண்ணாச்சி, யோகிபாபு, ராதிகா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். நடிகர் அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஆகையால் ஹரி மற்றும் ஜிவி பிரகாஷ் கூட்டணியில் முதல் முதலாக உருவாகி வரும் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.