இந்திய விமான படையின் ஏ.என்- 32 விமானம் விபத்துக்குள்ளானதில் 13 பேரின் சடலங்களும், கருப்பு பெட்டியும் மீட்கப்பட்டன
இந்திய விமான படையின் விமானம் ஏ. என்- 32 ஜூன் 3-ம் தேதி அசாம் மாநிலத்தின் ஜோர்கட்டிலிருந்து மதியம் 12.25 மணியளவில் அருணாச்சல பிரதேசதின் மேசூகா பகுதிக்கு புறப்பட்டு சென்றது. இதில் 13 பேர் பயணம் செய்தனர். இதையடுத்து விமானம் 1 மணியளவில் கட்டுப்பாடு அறையுடனான தொடர்பை இழந்தது. அதை தொடர்ந்து விமானத்தை தேடுவதற்கு இந்திய விமான படை மற்றும் இந்திய ராணுவத்தினர் முழு வீச்சில் தீவிரமாக தேடுதல் பணியில் இறங்கினர். ஒரு வாரத்திற்கும் மேலாக நடந்த தேடுதலுக்கு இன்று அருணாச்சல பிரதேசத்தின் லிப்போ பகுதியில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து விமானத்தில் சென்ற 13 பேர் உயிரிழந்ததாக இந்திய விமான படை இன்று தெரிவித்தது. இந்த விமானத்தின் பாகங்கள் விழுந்த அருணாச்சல பிரதேசத்தின் லிப்போ பகுதிக்கு தேடுதல் பணியினர் சென்று உயிரிழந்த 13பேரின் சடலத்தையும் மீட்டனர். அதே போல அந்த இடத்தில் விமானத்தின் கருப்பு பெட்டியும் மீட்கப்பட்டது.
இதில் இருக்கும் விமான தரவு ரெக்கார்டர் மூலம் 30 பாரா மீட்டர் வரையுள்ள அலைகளை பதிவு செய்ய முடியும் என்பதால் விமானத்தின் இயந்திரம், வேகம் மற்றும் விபத்திற்கு காரணமான விஷயங்கள் ஏதாவது பதிவாகியிருக்கும். மேலும் கருப்பு பெட்டியில் உள்ள காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் விபத்திற்கான தகவல்களையும், விமானிகளின் கலந்துரையாடல்களையும் பதிவு செய்து வைத்திருக்கும்.