Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எப்போ முடிவடையும்….? தீவிரமாக நடைபெறும் பணிகள்…. மாவட்ட ஆட்சியரின் தீடிர் ஆய்வு….!!

கீழடியில் நடைபெறும் அருங்காட்சியகத்தின் கட்டிட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள கீழடி பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆராய்ச்சியில் கிடைக்கும் அரிய வகை பொருள்கள் அனைத்தையும் பொதுமக்களின் பார்வைக்கு விரைவில் வைக்கப்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கீழடி பகுதியில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து அருங்காட்சியக கட்டிட பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றது என சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதனன் ரெட்டி மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து ஆய்வு நடத்திய பிறகு மாவட்ட ஆட்சியர் அருங்காட்சியகத்தின் இறுதிகட்ட  பணிகள் அனைத்தும், முழுமையாக முடிக்கப்பட்டு விரைவில்  அருங்காட்சியகம் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |