இறந்த மனைவியின் புகைப்படத்தை பதிவிட்டு திருமண நாள் வாழ்த்துக்களை அருண் ராஜா கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் கொரோனாவால் நிறைய திரையுலக பிரபலங்கள் உயிரிழந்தனர். பலரின் மரண செய்தி ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அந்த வகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஒருவர், இயக்குனர் அருண்ராஜ் காமராஜரின் மனைவி.
கொரோனா பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் இறுதிச் சடங்கின்போது நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வந்து ஆறுதல் கூறினர். இந்நிலையில், இறந்த மனைவியின் புகைப்படத்தை பதிவிட்டு திருமண நாள் வாழ்த்துக்களை அருண் ராஜா கூறியுள்ளார்.
திருமணநாள் வாழ்த்துகள் பாப்பி 😭❤️ pic.twitter.com/kUidCN8clo
— Arunraja Kamaraj (@Arunrajakamaraj) December 6, 2021