Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அறுந்து கிடந்த மின்கம்பம்…. அடுத்தடுத்து நடந்த துயரம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் பாய்ந்து தந்தை-மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அகரப்பேட்டை மணல்மேடு தெருவில் துரைக்கண்ணன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவியும், பிரேம்குமார், ஹேமா என்ற மகனும் மகளும் இருக்கின்றனர். இதில் பிரேம்குமார் என்ஜினீயரிங் படித்து விட்டு திருவெறும்பூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பயிற்சி பெற்று வந்தார். இவருடைய தந்தை துரைக்கண்ணன் அரசு போக்குவரத்து கழக கண்டக்டராக தற்போது மணப்பாறை டெப்போவில் வேலை பார்த்து வந்தார். இதனையடுத்து வேலை முடிந்தவுடன் துரைக்கண்ணன் அகரபேட்டையில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் உறங்கி கொண்டு இருந்தார். அப்போது அகரபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக துரைக்கண்ணன் வீட்டின் அருகில் மின்கம்பி அறுந்து தரையில் கிடந்தது.

இந்நிலையில் வீட்டின் வெளியே நாய் குறைக்கும் சத்தம் கேட்டதால் துரைக்கண்ணன் வெளியே வந்துள்ளார். அப்போது அவர் தரையில் அறுந்து கிடந்த மின்கம்பியை கவனிக்காமல் மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து கீழே விழுந்தார். இதனை பார்த்த பிரேம்குமார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தனது தந்தையை காப்பாற்ற முயற்சி செய்தபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து மயங்கி கீழே விழுந்தார். இதனைதொடர்ந்து தந்தை-மகன் இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர் துரைக்கண்ணன் மற்றும் அவரது மகன் பிரேம்குமார் ஆகிய இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

Categories

Tech |