Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அறுந்து விழுந்த மின்கம்பி…. தெரியாமல் மிதித்த முதியவர்…. அதிர்ச்சியில் குடுபத்தினர்….!!

அறுந்து கிடந்த மின் கம்பியால் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பழத்தோட்ட பாலசுப்பிரமணிய புரத்தில் வேலையா என்ற தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2 மகன்கள் மற்றும் 3 மகள்கள் இருக்கின்றனர். இந்த மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கூடிய பெய்த கனமழை காரணமாக சில இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தது. இந்நிலையில் வேலையா டீ அருந்துவதற்காக மாதவரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது மின்கம்பி அறுந்து கிடந்தது தெரியாமல் அவர் மிதித்து விட்டார்.

இதனால் வேலையை மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேலையா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |