”யானை’ படத்தின் டப்பிங் வேலைகளை அருண் விஜய் தொடங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”யானை”. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கின்றனர். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில், ‘யானை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் டப்பிங் வேலைகளை அருண் விஜய் தொடங்கி இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Dubbing for #Yaanai!!#DirectorHari @DrumsticksProd pic.twitter.com/Z6D74v1qTG
— ArunVijay (@arunvijayno1) December 7, 2021