நடிகர் அருண்விஜய் ‘யானை’ படப்பிடிப்பின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
நடிகர் அருண் விஜய் தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் ஆவார். இவர் தற்போது ஹரி இயக்கத்தில் ”யானை” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், யோகி பாபு, பிரகாஷ்ராஜ் , மற்றும் பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். கோபிநாத் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம் பழனி போன்ற இடங்களில் நடைபெற்ற நிலையில், தற்போது இந்த படப்பிடிப்பின் அப்டேட்டை நடிகர் அருண்விஜய் வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.