சுவைகளின் வகை ஆறு,, அவை:
உணவுகளில் அறுசுவையும் இருக்கிறது, என்று பலர் சொல்ல நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆறு வகையான சுவை உணவில் அதிகம் சேர்க்கப்படுகிறது இயற்கையாகவே அமைந்துள்ளது.. இதனால் அறுசுவை என்ன நன்மைகள் தரும் நாம் சாப்பிடும் உணவு.
இனிப்பு:
நம்மில் பல பேர் விரும்பி சாப்பிடும் சுவை இனிப்பாகும். அளவாக இனிப்பை உட்கொண்டால் உடலுக்குப் பலத்தை தரும். அளவுக்கு மீறி இனிப்பைச் சாப்பிட்டால் உடற்பருமன் ஏற்பட்டும், உயிருக்கும் கூட எமனாக மாறிவிடும்.
பழவகைகள்,கருப்பட்டி,பனங்கற்கண்டு, வெல்லம் ஆகியவற்றைச் சர்க்கரைக்கு மாற்றாக நாம் உண்ணலாம்.
உவர்ப்பு:
உப்புச்சுவை உவர்ப்பு என அழைக்கப்படுகிறது. உமிழ்நீர் சுரக்க உவர்ப்புச் சுவை உதவுகிறது. அத்துடன் இதர சுவைகளைச் சமன்படுத்தும் தன்மை கொண்டது இது. மிதமான அளவில் இதனை உட்கொள்ள வேண்டும். உவர்ப்புச் சுவை, நாம் உண்ணும் உணவு செரிமானமாகத் துணைபுரிகிறது.சுரைக்காய், முள்ளங்கி, பூசணிக்காய், கீரைத்தண்டு வாழைத்தண்டு முதலியவற்றில் உவர்ப்புச் சுவை அதிகமாக உள்ளது.
புளிப்பு:
நம்மில் சிலருக்குப் புளிப்புச் சுவை அவ்வளவாகப் பிடிக்காமல் போகலாம். இருப்பினும் இச்சுவை தரும் பயன்கள் பற்பல. பசியுணர்வை உண்டாக்கி நரம்புகளை வலுவாக்க துணைபுரிகிறது. மிதமிஞ்சிய அளவில் புளிப்பைச் சாப்பிட்டால் ரத்த அழுத்தம், உடல் சோர்வு ஆகிய உடற்கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.மாங்காய், எலுமிச்சை, புளி, தக்காளி போன்றவற்றில் நீங்கள் புளிப்பைச் சுவைக்க முடியும்.
துவர்ப்பு:
சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவோருக்குத் துவர்ப்புச் சுவை உதவக் கூடும். வயிற்றுப்போக்கினைக் கட்டுப்படுத்த உதவி செய்வதுடன் பித்தத்தைச் சரியான அளவில் வைத்து கொள்ள உதவக்கூடியது. அளவிற்கு மீறி இதனைச் சாப்பிட்டால் வாத நோய்கள் உண்டாகக் கூடும். மஞ்சள், மாதுளை, வாழைக்காய் ஆகியவற்றில் துவர்ப்பை நீங்கள் சுவைக்கலாம
கசப்பு:
கசப்பு என்றாலே பலரும் முகம் சுளிப்பர். ஆனால் இதர சுவைகளை விட இது தரும் நன்மைகள் அதிகம். அதற்குக் கைப்பு என்ற மற்றொரு பெயரும் உண்டு. நோய் எதிர்ப்புச் சக்தியாகத் திகழும் வல்லமை கொண்டது இச்சுவை. கத்தரிக்காய், சுண்டக்காய், பாகற்காய் ஆகியவற்றில் கசப்பை நீங்கள் சுவைக்கலாம்
கார்ப்பு:
காரச் சுவை கார்ப்பு என அழைக்கப்படுகிறது. இது நுனி நாக்கில் எரிச்சலை உண்டாக்கும். அதிகமாக காரத்தைச் சாப்பிட்டால் வயிற்றிலும், குடலிலும் புண்களை ஏற்படுத்தும்.
மிளகு, கடுகு, மிளகாய், வெங்காயம் ஆகியவற்றில் கார்ப்புச் சுவை அதிகமாக உள்ளது.