Categories
உலக செய்திகள்

‘கடுமையான தண்டனை வழங்கப்படும்’… அறுவடைக்காக விவசாயிகள் குவிப்பு…. வட கொரியா அதிபர் அறிவிப்பு….!!

அறுவடை காலத்தில் உணவு பொருட்கள் திருட்டு போனாலோ அல்லது ஏமாற்றம் செய்யப்பட்டாலோ கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்.

உலக நாடுகளின் எதிர்ப்பை கண்டுகொள்ளாமல் ஐ.நா பாதுகாப்பு அமைப்பின் முடிவுகளையும் பொருட்படுத்தாமல் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் வட கொரியா அணுகுண்டு சோதனைகளை நடத்தி வருகிறது. மேலும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சோதனை செய்து வருகிறது. இதனால் அந்நாட்டின் மீது ஐ.நா பாதுகாப்பு அமைப்பு கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் அங்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதற்கு மத்தியில் கொரோனா தொற்றின் காரணமாக வட கொரியாவின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக உணவுப் பொருட்கள் விநியோகம் பாதிக்கப்பட்டு அதற்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தற்போதைய வட கொரியா அதிபரான கிம் ஜாங் உன் கடந்த 1990 ஆம் ஆண்டில் ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தை தற்போதைய நிலைமையுடன் ஒப்பிட்டு கூறியுள்ளார்.

அதில் “1990 ஆண்டு நிலவிய ‘ஆர்டியஸ் மார்ச்’ என்ற பஞ்சத்தினால் லட்சக்கணக்கான மக்கள் இறந்தனர்.  இது வரலாற்றின் பெரும் கரும்புள்ளியாக பதிவானது” என்று கூறியுள்ளார். இதற்கிடையில்  மக்கள் குறைவாக சாப்பிட வேண்டும் என்று தற்பொழுது உத்தரவிட்டுள்ளார். இந்த செய்தியை அறிந்த மக்கள் மிகுந்த வருத்தத்திற்கு ஆளானார்கள். தற்பொழுது இந்த நிலையில் வரக்கூடிய அறுவடை காலத்தை மக்கள் நம்பிக்கையுடன் எதிர் நோக்க வேண்டும்.

இதன் மூலம் கிடைக்கும் ஒவ்வொரு அரிசி மற்றும் சோளத்தை பாதுகாப்பாக சேகரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக பல்லாயிரக்கணக்கான மக்கள் அறுவடைக்காக வயலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் அறுவடையின்போது உணவுப்பொருட்கள் திருடப்பட்டாலோ அல்லது ஏமாற்றம் செய்யப்பட்டாலோ கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்றும் வட கொரியா அதிபர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |