Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்கள்…. சரக்கு ரயிலில் 1,000 டன் …. அரவைக்காக இந்த மாவட்டத்திற்கு….!!

அரவைக்காக நீடாமங்கலத்தில் இருந்து ராஜபாளையத்தில் நெல் சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

விவசாயிகளிடம் இருந்து அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்கள் வாணிப கழக சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு அரவைக்காக மாவட்டத்தில் உள்ள  அங்கீகரிக்கப்பட்ட ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது. மேலும் வெளி மாவட்டங்களில் உள்ள ஆலைகளுக்கும் இந்த நெல் மூட்டைகள் சரக்கு ரயில் மூலம் அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது.

அதன்படி திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலத்தில் இருந்து ராஜபாளையத்திற்கு அரவைக்காக  1,000 டன் நெல் சரக்கு சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்காக நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய தாலுகாக்களில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகள் 80 லாரிகளில் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரயிலின் 21 பெட்டிகளில் ஏற்றியதை அடுத்து ரயில் நெல் மூட்டைகளுடன் ராஜபாளையத்திற்கு சென்றது

Categories

Tech |