Categories
சினிமா தமிழ் சினிமா

முத்தையா இயக்கத்தில் நடிக்கும் ஆர்யா…. “நல்ல படைப்பை வழங்குவோம்”…. படக்குழு நம்பிக்கை….!!!!!

ஆர்யா நடிக்கும் 34ஆவது திரைப்படத்தை இயக்குனர் முத்தையா இயக்குகின்றார்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் ஆர்யா. இவர் நடிப்பில் அண்மையில் டெடி, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட மாறுபட்ட திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது புதிய திரைப்படங்களில் நடிக்கின்றார். இந்த படத்தில் நடிகை சித்தி இதானி ஹீரோயினாக நடிக்க முத்தையா இயக்குகின்றார்.

மேலும் படத்தை ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கின்றது. படக்குழுவினர் நாங்கள் அனைவரும் பார்வையாளர்களுக்கு ஒரு சிறப்பான அனுபவத்தை தரும். நல்ல படைப்பை வழங்குவோம் என நம்புவதாக தெரிவித்துள்ளார்கள். கிராமத்து பின்னணியில் அனைவரும் குடும்பத்துடன் ரசிக்கும் படியாக இருக்கும் இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கின்றார்.

Categories

Tech |