நடிகர் ஆர்யா நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்ததால் அவர் மீது போடப்பட்ட வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.
முன்னணி நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் அவன் இவன். பாலா இப்படத்தினை இயக்கியிருந்தார். இப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் பற்றியும், கரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் குறித்தும் அவதூறாக விமர்சித்து இருப்பதால், சிங்கம்பட்டி ஜமீன்தார் தீர்த்தபதி ராஜா மகன் சங்கர் ஆத்மஜன் இதுகுறித்து அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்த ஒரு வருடமாக நடந்துவரும் இவ்வழக்கில் ஆர்யா, இயக்குனர் பாலா, தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் ஆகியோரை நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஆர்யா தற்போது நீதிமன்றத்தில் ஆஜராகி வருத்தம் தெரிவித்துள்ளார். ஆகையால் ஆர்யா மீது போடப்பட்டுள்ள வழக்கு முடிவுக்கு வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.