போதைப்பொருள் வழக்கில் ஷாருக்கானின் மகன் ஆர்யகான் இன்று ஜாமினில் வெளிவந்தார்.
மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். ஆர்யகானின் ஜாமீன் மனு அக்டோபர் 8ஆம் தேதி நிராகரிக்கப்பட்டது. பின்னர், அக்டோபர் 11ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது அவரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.
இதனையடுத்து, பலமுறை ஆர்யகானின் மனுவை நீதிமன்றம் நிராகரித்து வந்த நிலையில், நேற்றைய முன்தினம் இவருக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், ஆர்யன்கான் இன்று கடுமையான நிபந்தனைகளுடன் ஜாமினில் இருந்து வெளியே வந்தார்.