Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா இந்த நடிகரா அது..? சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவின் தந்தை… வெளியான முக்கிய தகவல்..!!

நடிகர் ஆர்யாவின் தந்தையாக “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தில் நடித்திருப்பவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்யா நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள “சார்பட்டா பரம்பரை” படம் அமேசான் ப்ரைமில் நேரடியாக வெளியாகியுள்ளது. மேலும் ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படத்தில் பசுபதி, கலையரசன், ஜான் கொக்கன், துஷாரா விஜயன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இந்த படம் சிறந்த நடிப்பு, ஒவ்வொரு காட்சியின் வடிவமைப்பு, சிறந்த கதைக்களம் என பிரபலங்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இதற்கிடையே நடிகர் ஆர்யாவின் தந்தை கதாபாத்திரம் இந்த படத்தில் ஒரு காட்சியில் மட்டுமே வந்திருக்கும். பொல்லாதவன், வடசென்னை, ஆடுகளம் உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான நடிகர் கிஷோர் தான் சார்பட்டா திரைப்படத்தில் ஆர்யாவின் தந்தையாக நடித்துள்ளார். ஆனால் முக்கியமான கதாபாத்திரமாக படம் முழுக்க அமைந்திருப்பது ஆர்யாவின் தந்தை கதாபாத்திரமான நடிகர் கிஷோர் தான்.

Categories

Tech |