ஆர்யா நடிக்கும் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் ஆர்யா. இவர் நடிப்பில் ‘சார்பட்டா பரம்பரை’ மற்றும் ‘டெடி’ திரைப்படங்கள் இந்த ஆண்டு OTT யில் வெளியானது. இந்தப் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ஆர்யாவின் அடுத்த படத்தை ‘டெடி’ பட இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்குகிறார். பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். மேலும் சிம்ரன், பரத் ராஜ் மற்றும் பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.
Super excited to begin my next with my brother @ShaktiRajan 🤗This is gonna be something special for all of us. Need all ur love and blessings 😍#Arya33 @AishuLekshmi @immancomposer @madhankarky @IAmkavyashetty @SimranbaggaOffc @ThinkStudiosInd @DopYuva @DoneChannel1 @bharatR1026 pic.twitter.com/B7P1epIw6n
— Arya (@arya_offl) October 25, 2021