நேரடியாக ஓடிடியில் வெளியாகும் ஆர்யாவின் ‘டெடி’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘டெடி’. இந்தப் படத்தை நாய்கள் ஜாக்கிரதை ,மிருதன், டிக் டிக் டிக் போன்ற படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார் . இந்தப் படத்தில் கதாநாயகியாக ஆர்யாவின் மனைவி சாயிஷா நடித்துள்ளார் . மேலும் கருணாகரன், சாக்ஷி, சதீஷ், இயக்குனர் மகிழ் திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் .
டி இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ. ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார் . இந்நிலையில் ‘டெடி’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வருகிற மார்ச் 19ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழ் ,மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.