கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. அதேபோல பல்வேறு மாநில அரசுகளும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, புதுச்சேரி மாநில அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி, புதுச்சேரியில் 144 தடை உத்தரவு நாளை (திங்கட்கிழமை) அமலுக்கு வரும் என்று அம்மாநில முதல்வர் நாரயணசாமி தெரிவித்தார். ஆனால் சமீபத்தில் இன்று இரவு 9 மணி முதல் அமலுக்கு வரும் என்று முதல்வர் நாராயணசாமி கூறினார்.
இந்தநிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. தடையுத்தரவால் சாலையில் 3 பேருக்கு மேல் செல்பவர்களை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பி வருகின்றனர். மேலும் மார்ச் 31 ஆம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.