தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் செப்டம்பர் 21-ஆம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மதியம் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடக்கிறது..
தமிழ்நாட்டில் செப்டம்பர் 13-ஆம் தேதி ஓரிடத்திற்கு மட்டும் மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. காலியாக உள்ள 3 இடங்களில் ஓரிடத்திற்கு மட்டும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது..
இந்த நிலையில் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் செப்டம்பர் 21-ஆம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் மாற்றம் இருக்கும் என தெரிகிறது.. சபாநாயகர் தலைமையில் இன்று மதியம் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. எனவே பட்ஜெட் கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிக்கப்படும் என தெரிகிறது..