Categories
அரசியல் மாநில செய்திகள்

என் உயிர் இருக்குற வரை…. இதான் வாழ்நாள் கடமை.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி …!!

தமிழக அரசு சார்பில் நடந்த அரசு விழாவில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், கோவை மாவட்டத்தில் இதே போன்ற ஒரு அரசு விழாவில் கலந்து கொண்டேன், அங்கும் இதே போல பல்வேறு பணிகளை துவக்கி வைத்தேன், அடிக்கல் நாட்டினேன். இத்தகைய அரசு விழாக்கள் பொழுது போக்கிற்காக நடைபெறுகின்ற விழாக்கள் அல்ல, ஏதோ எங்களை புகழக்கூடிய விழாக்கள் அல்ல, மக்களுக்கு நாங்கள் என்ன செய்யப் போகிறோம், என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை எடுத்துச் சொல்லக்கூடிய விழா தான்.

இது போன்று மக்கள் மன்றமாக இருந்தாலும் சரி, சட்டமன்றமாக இருந்தாலும் சரி, என்னை பாராட்டி பேசுவதை விட மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளைப் பற்றி அனைவரும் பேச வேண்டும் என்று நான் விரும்புகிறவன். புதிய புகழ் மொழிகள் எனக்கு தேவையில்லை, இருக்கும் புகழே போதும் என்று நினைக்கக் கூடியவன் நான்.

ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று உழைப்பின் சிகரமாக இருக்கக்கூடிய தலைவர் கலைஞர் அவர்கள் பாராட்டி சொன்னதை விட எனக்கு வேறு ஏதேனும் பாராட்டு இருக்க முடியுமா? நீ உன் அப்பாவை போலவே இருக்கிறாய் என்று பேரறிஞர் அண்ணா சொன்னதை விட வேறு பாராட்டு எனக்கு இருக்கவே முடியாது. இத்தகைய பாராட்டுக்களின் மூலமாக அடைந்த உற்சாகத்தால் தான் நான் உழைத்துக் கொண்டிருக்கிறேன், இன்னும் உழைப்பேன், என் உயிர் இருக்கின்ற வரைக்கும் நான் உழைத்துக் கொண்டே இருப்பேன் இது உறுதி என தெரிவித்தார்.

Categories

Tech |