Categories
தேசிய செய்திகள்

காலை நிலவரப்படி மகாராஷ்டிராவில் 472 பேருக்கு புதிதாக கொரோனா… திணறி வரும் மாநில அரசு..!

இன்று காலை 10 மணி வரை மகாராஷ்டிராவில் 472 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொத பாதிப்புகளின் எண்ணிக்கை 4,676 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இன்று காலை வரை மாநிலத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த இறப்புகள் எண்ணிக்கை மாநிலத்தில் 232 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும், கொரோனா பாதிப்பு காரணமாக 28வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ளது. நேற்று முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் எந்த தளர்வுகளும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 590 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 3,251 பேர் குணமடைந்தும், 14,759 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவித்து உள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,601 ஆக உயர்வடைந்து உள்ளது.

நேற்று அதிக அளவாக மகாராஷ்டிராவில் 4,666 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில், இன்று மேலும் 472 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மும்பையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை சுமார் 3 ஆயிரத்தை தண்டி சென்றுள்ளது.

Categories

Tech |