Categories
தேசிய செய்திகள்

மே 13ம் வரை 14.62 கோடி பேருக்கு ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி வழங்கப்பட்டுள்ளது!!

பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான 2ம் கட்ட அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சீராக்க ஊக்குவிப்பு திட்டங்களை பிரதமர் அறிவித்திருந்தார். அதற்கான விளக்கத்தை நிதியமைச்சர் நேற்று விளக்கியிருந்தார். இந்த நிலையில் 2வது நாளாக தொகுப்பு திட்டம் குறித்து விளக்கம் அளித்து வருகிறார். அதில் சுமார் 9 திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன.

வெளிமாநில தொழிலாளர்களுக்காக இன்று 3 திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. விவசாயிகளுக்கு 2 திட்டங்கள் இன்று அறிவிக்கப்படவுள்ளது. அதேபோல சாலையோர வியாபாரிகள், சிறிய வியாபாரிகளுக்கான திட்டங்கள் இன்று அறிவிக்கப்படும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி வருகிறார்.

சுயதொழில் செய்து வருபவர்களுக்கும் இன்று திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன. மேலும், பிரதமரின் தன்னிறைவு இந்தியா என்கிற திட்டத்தின் அடிப்படையில் இன்றைய அறிவிப்புகள் இருக்கும் என நிதியமைச்சர் கூறியுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

ஊரடக வளர்ச்சி திட்டத்தின் அறிவிப்பு:

* மே 13ம் தேதி வரை 14.62 கோடி பேருக்கு ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி வழங்கப்பட்டுள்ளது.

* ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் புலப்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் வேலை வழங்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்.

* வெளிமாநிலங்களில் இருந்து திரும்பியவர்களுக்கு உள்ளூரில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி கொடுக்கும் செயல்முறை துவங்கியது.

* ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் தற்போதைய செலவு மட்டும் ரூ.10,000 கோடி ஆகும்.

* நேற்று மட்டும் 1.87 லட்சம் கிராமங்களில் 2.33 கோடி பேருக்கு ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை கொடுக்கப்பட்டுள்ளது.

* மழை காலங்களிலும் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை தொடர்ந்து செயற்படுத்த திட்டம்.

* வேலை வாய்ப்பு திட்டத்தின் சராசரி ஊதியம் ரூ.182 ல் இருந்து இந்த ஆண்டு ரூ.202 ஆக அதிகரித்துள்ளது.

விவசாயிகளுக்கான அறிவிப்பு:

* விவசாயிகளின் கடன்களுக்கான வட்டியை செலுத்த வேண்டிய அவகாசம் 1ல் இருந்து மே 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

* 25 லட்சம் கிசான் கிரெடிட் கார்டுகள் மூலம் 25 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் கொடுக்கப்பட்டுள்ளது.

* ஏற்கனவே 3 கோடி விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன்கள் அளிக்கப்பட்டுள்ளன.

* 3 மாத கடன் தவணை ஒத்திவைப்பு திட்டத்தின் படி சுமார் 3 கோடி விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர்.

* சுமார் 4.22 லட்சம் கோடி அளவிற்கு கடந்த 3 மாதங்களில் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளன.

* மார்ச் முதல் ஏப்ரல் வரை சுமார் 86,600 ஆயிரம் கோடி ரூபாய் வரை வேளாண்மை கடன் வழங்கப்பட்டுள்ளது.

* நபார்டு உள்ளிட்ட வங்கிகள் மூலமாக விவசாயத்துறைக்கு கடன் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது

* ரூ.6700 கோடி மாநில அரசுகளுக்கு விவசாய கொள்முதலுக்காக வழங்கப்பட்டுள்ளது

Categories

Tech |